Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மேய்ந்து கொண்டிருந்த போது…. மின்சாரம் தாக்கி 3 பசு மாடுகள், 2 ஆடுகள் பலி….!!!

மின்சாரம் தாக்கி 3 பசு மாடுகள், 2 ஆடுகள் உயிரிழந்தன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அரக்கோணம் சோமசுந்தரம் நகரில் துரைக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 2 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் துரைகண்ணுவின் பசு மாடுகளும் குமாரசாமி என்பவரின் ஒரு பசுமாடும் வயலில் மேய்ந்து கொண்டிருந்தன.

அப்போது மின்வயர் அறுந்து விழுந்ததால் மின்சாரம் தாக்கி 3 பசு மாடுகளும் பரிதாபமாக உயிரிழந்தது. இதேபோல் அணைக்கட்டபுதூர் கிராமத்தை சேர்ந்த ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான செம்மறி ஆடுகள் டிரான்ஸ்பார்மர் அருகே மேய்ந்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி பலியானது. இதுகுறித்து மேற்கண்ட கிராம நிர்வாக அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |