மின்னல் தாக்கி 2 மாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம் கிராமத்தில் விவசாயியான கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் வைத்தியநாதபுரம் செல்லும் சாலை அருகே கோவிந்தனின் பசுமாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது கனமழை பெய்ததால் மின்னல் தாக்கி இரண்டு மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து அறிந்த கால்நடை மருத்துவர் கண்ணன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாடுகளை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் மாடுகளின் உடல் அருகில் இருக்கும் காட்டில் புதைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.