விருதுநகர் மாவட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜக மாவட்ட தலைவரான ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாஜக ஆதரவாளர்கள் கொலை செய்யப்பட்டதற்கும் தக்க தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் மாவட்ட செயலாளர் சந்திரன், விவசாய அணி மாவட்ட பொது செயலாளர் ஸ்ரீ காந்த், தகவல் தொழில் நுட்ப செயலாளர் மணிகண்டன்,நகர தலைவர் ராஜாராம், நகர பொது செயலாளர்கள், விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் கதிரேச பாண்டியன், மாவட்ட கிழக்கு ஒன்றிய தலைவர் தங்கராஜ், ஒன்றிய துணை தலைவர் முத்து கிருஷ்ணன் மற்றும் பாஜக தொண்டர்கள் என பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.