மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் 205 இடங்களிலும், பாஜக 84 இடங்களிலும் முன்னணி வகிக்கின்றது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும், ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து அசாமில் 126 தொகுதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. புதுச்சேரி மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் 294 தொகுதிகளில் 8 கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது. திரிணாமுல் காங்கிரஸ் 205 இடங்களிலும், பாஜக 84 இடங்களிலும் முன்னணி வகிக்கின்றது. மேற்குவங்கத்தில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் திரிணாமுல் காங்கிரஸ் அதிக இடங்களை பெற்று மம்தா பானர்ஜி ஆட்சியை பிடித்துள்ளார்.