200 வருடங்களுக்கும் மேலான இடைவெளிக்குப் பின், மேற்குத் தொடர்ச்சி மலையின் பல்லுயிர் மண்டலத்தைச் சேர்ந்த மலையாள ஆராய்ச்சியாளர்கள் குழுவால் இந்தியாவில் ஒரு புதுவகை தேனீ கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதன் இருண்டநிறம் காரணமாக, இதற்கு “எபிஸ் கரிந்தோடியன்” எனும் அறிவியல் பெயர் வழங்கப்பட்டது. இதன் பொதுவான பெயர் “இந்தியன் பிளாக் ஹனிபீ” என்பதே ஆகும். இது வணிகரீதியாக பயிரிடக்கூடிய தேனீக்களின் இனமென்று கூறப்படுகிறது. பேராசிரியர் டாக்டர். ஷானாஸ் எஸ், செர்தலா எஸ்.என். கல்லூரியின் விலங்கியல் துறையில் ஆராய்ச்சியாளரான ஜி.
டாக்டர் அஞ்சு கிருஷ்ணன், ஈ.எம்.இ.ஏ கல்லூரியில் பயோடெக்னாலஜி துறை தலைவர் கோண்டோட்டி, மஷ்கூர் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் குழுவால் புதுவகை தேனீ கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் கடைசியாக கண்டுபிடிக்கப்பட்ட தேனீ 1798ம் வருடத்தில் டென்மார்க் விஞ்ஞானி ஜோஹன் கிறிஸ்டியன் ஃபேப்ரிசியஸால் கண்டுபிடிக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்ட “எபிஸ் இண்டிகா” ஆகும். அதன்பிறகு இந்தியாவில் ஒரு புதிய வகை தேனீ கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். எபிஸ்காரின் கண்டுபிடிப்புடன், உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தேனீ இனங்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.