Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி இடைத்தேர்தல்..!!

மேற்கு வங்கத்தில் 3 சட்டப் பேரவை தொகுதிக்கு செப்டம்பர் 30ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.. மேற்குவங்கத்தில் காலியாக உள்ள பபானிபூர், சம்சர்கஞ்ச் மற்றும் ஜாங்கிபூர் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 30ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.. அதேபோல ஒடிசாவின் பிப்லி சட்டப்பேரவை தொகுதிக்கும், 30ஆம் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.. அக்டோபர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது..

மம்தா பானர்ஜி 2011, 2016ல் பபானிபூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்எல்ஏவாக தேர்வானார்.. சட்ட பேரவை தேர்தலில் நந்திகிராமில் போட்டியிட்டு தோல்வியடைந்த முதல்வராக  மம்தா பதவியேற்றார்.. முதல்வராகி 6 மாதத்திற்குள் எம்எல்ஏவாக வேண்டி இருப்பதால் பபானிபூரில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது..

Categories

Tech |