Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்கத்தில்… தட்டித் தூக்கிய திரிணாமுல் காங்கிரஸ்… பெரும் பின்னடைவில் பாஜக…!!

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் 186 இடங்களிலும், பாஜக 102 இடங்களிலும் முன்னணி வகிக்கின்றது.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும், ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து அசாமில் 126 தொகுதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. புதுச்சேரி மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் 294 தொகுதிகளில் 8 கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில் தபால் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது. திரிணாமுல் காங்கிரஸ் 182 இடங்களிலும், பாஜக 102 இடங்களிலும் முன்னணி வகிக்கின்றது. கடந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 211 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த முறை திரிணாமுல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது.

Categories

Tech |