Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் 4 லட்சத்தை எட்டும் பாதிப்பு… கொரோனா இரண்டாம் அலை ஆரம்பம்…!!!

மேற்கு வங்காளத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேற்கு வங்காள மாநிலத்தில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ” மேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,981 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,85,589 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 56 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,013 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வரை 3,42,133 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு 36,443 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளது.

 

 

Categories

Tech |