மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்கின்றனர்.
தமிழகத்தில் இருக்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி செல்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம்- உத்திரமேரூர் சாலையில் செல்லும் அரசு பேருந்தில் அளவுக்கு அதிகமான மாணவர்கள் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்கின்றனர். மேலும் மேற்கூரையின் விளிம்புகளை பிடித்துக்கொண்டே மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்வது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.