Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மேலமறைக்காடார் கோவில் குடமுழுக்கு… பக்தர்கள் சுவாமி தரிசனம்…!!

நாகை மாவட்டத்தில் மேலமறைக்காடார்  கோவில் குடமுழுக்கு விழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

நாகை மாவட்டம் வேதராண்யம் நகராட்சியில் உள்ள மறைஞாயநல்லூர் கிராமத்தில் வேதநாயகி அம்மன் மேலமறைக்காடார் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த கோவில் கட்டிடங்கள் முற்றிலும் இடிந்து காணப்பட்டதன் காரணமாக இறைவனை ஓரு கொட்டகை அமைத்து அதில் வைத்து வழிபட்டனர்.  ஆதலால் கோவிலை புதிதாக கட்ட திருப்பணிகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில் இப்பணி நிறைவு பெற்றவுடன் நேற்று முன்தினம்  நான்காம் கால யாக பூஜை முடிந்து குடமுழுக்கு நடந்தது. இந்த விழாவில் கோவில் நிர்வாகிகள், உபயதாரர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். இதற்கு வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Categories

Tech |