Categories
தேசிய செய்திகள்

மேலும் ஒருவருக்கு குரங்கம்மை….. பரவும் அபாயம்….. எச்சரிக்கை….!!!!

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மைதொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கேரளாவில் மற்றொரு நபர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா சார்ஜ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதல்முறையாக கேரளாவில் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளது. ஐ.கே அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து தொற்று உறுதியான பிறகு அவர் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் கண்டறியப்பட்டு அவர்களுக்கு நோய் தொற்று இருக்கிறதா? என்பது பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில் துபாயிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு 40 வயதான நபர் கேரளா வந்தார். அவருக்கு காய்ச்சல் மற்றும் உடலில் லேசான கொப்பளங்கள் இருந்ததை தொடர்ந்து குரங்கம்மை நோய் இருக்கலாம் என சந்தேகம் சுகாதாரத்துறையினருக்கு ஏற்பட்டது. பின்னர் அவரின் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு பரிசோதனை செய்த பிறகு அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் கேரளாவில் குரங்கையால் மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். நேற்று ஆந்திராவிலும் சிரமிக்கு குறுங்காமை அறிகுறி ஏற்பட்ட நிலையில் தமிழகத்திலும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டு வருகின்றது.

Categories

Tech |