நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்றைய தினம் இதுவரை இல்லாத அளவாக 6993 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதில் மேலும் தற்போது ஒரு சட்டமன்ற உறுப்பினர் பாதிக்கப்பட்டுள்ளார். நாகர்கோயில் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் ராஜனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் குமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளர். தமிழகத்தில் இதுவரை அமைச்சர்கள் உட்பட 21 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பாதிப்பு என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது