Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மேலும் ஒரு நபருக்கு தொடர்பா….? கணவரை கொன்று வீசிய மனைவி…. சேலத்தில் பரபரப்பு…!!

கணவரை கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் பகுதியில் போர்வெல் தொழிலாளியான வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தென் ஆப்பிரிக்காவில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் விஜயலட்சுமிக்கும் உறவினரான குமரன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறிவிட்டது. இது குறித்து அறிந்த வெங்கடேசன் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்து தனது மனைவியையும், குமரனையும் கண்டித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த இருவரும் வெங்கடேசனை அரிவாள்மனையால் கொடூரமாக வெட்டி கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசி சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜயலட்சுமி மற்றும் குமரன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். தற்போது இந்த கொலை வழக்கில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |