Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மேலும் ஒரு பகுதியில் 13 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு …!!!

காஞ்சிபுரத்தில் மேலும் ஒரு பகுதிக்கு கொரோனா பரவல் காரணமாக 13 நாள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வந்த, நிலையில் தற்போது கட்டுக்குள் இருக்கிறது. சென்னையில் இதன் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னையை சேர்த்து அண்டை மாவட்டமான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திலும் முழுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டு கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் ஜூலை 26 வரை முழுக்க அமல்படுத்தப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பிள்ளையார் பாளையத்தில் 21 தெருக்கள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளதாகவும், காய்கறி, அத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கு சென்று தேவைப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |