திரையுலகில் மேலும் ஒரு பிரபல இளம் நடிகை திடீரென மர்ம முறையில் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அவரின் ரசிகர்கள், திரைப் பிரபலங்கள், உறவினர்கள் என அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரின் தற்கொலைக்கான காரணம் என்னவென்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த இளம் நடிகை ஆர்யா பானர்ஜி (33) வீட்டில் பிணமாக கிடந்துள்ளார்.
இவர் வித்யாபாலன் நடித்த டர்டி பிக்சர், லவ்செக்ஸ் அண்ட் தோக்கா ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஆர்யாவின் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் கதவைத் தட்டிய போது, கதவு திறக்காததால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் கதவை திறக்கும் போது, ஆர்யா மூக்கில் ரத்தம் வழிய வாந்தி எடுத்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். தொடர்ந்து மரணம், தற்கொலைகள் என இந்த வருடம் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு மோசமான ஆண்டாக அமைந்துள்ளது.