கனமழை காரணமாக வெள்ளி, சனிக் கிழமை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இன்று மழை சற்று குறைந்திருந்தாலும் 16ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தாலுக்கா பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் மாங்காடு பகுதியில் உள்ளடங்கும்.
Categories