Categories
தேசிய செய்திகள்

மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு…. அரசு புதிய உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேலும் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு தருவதாக துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். மே 31-ஆம் தேதியுடன் முழு ஊரடங்கு முடிய உள்ள நிலையில் ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை பகல் 12 மணிவரை ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள அனுமதி தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |