பிரிட்டனில் பல புதிய வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக இங்கிலாந்தின் முன்னாள் துணைத் தலைமை மருத்துவ அதிகாரி எச்சரித்துள்ளார்.
இங்கிலாந்தின் முன்னாள் துணைத் தலைமை மருத்துவ அதிகாரி கொரோனாவிற்கு எதிரான கட்டுப்பாடுகளில் நாம் அடுத்த நிலையை எட்டும் போது, மேலும் அதிகமாக உருமாறிய புதிய கொரோனாவை சந்திக்க நேரலாம் என்று எச்சரித்துள்ளார். அதாவது தற்போது பிரிட்டனில் 11 நபர்களுக்கு தென்னாபிரிக்காவில் பரவும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் யாரும் எந்த நாட்டுடனும் பயண தொடர்பில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தென் ஆப்பிரிக்காவில் பரவிய தொற்று ஏற்பட்டவர்களை கண்டறிவதற்காக சுமார் எட்டு பகுதிகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அதிகாரிகள் பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்தின் முன்னாள் துணை தலைமை மருத்துவ அதிகாரியான Gina Radford என்பவர், பிரிட்டனில் கொரோனாவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைமுறையில் இருப்பது நல்லது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்காக அதிகம் பயப்பட தேவையில்லை. ஏனெனில் நாம் தடுப்பூசி திட்டம் மற்றும் தேசிய ஊரடங்கு போன்றவை வைத்திருக்கிறோம். எனினும் தொற்றுகளும் அதிகமாக பரவி வருகின்றன. இதில் குறிப்பாக உருமாறிய புதிய கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. எனவே இதனை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.