Categories
மாநில செய்திகள்

மேலும் வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு… வானிலை ஆய்வு மையம்…!!!

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேலும் வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த புரெவி புயல் இலங்கை அருகே கரையை கடந்தது. அதன்பிறகு தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல் கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் திடீரென பின்வாங்கி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வங்க கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மிக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து விட்டது. அதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |