தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை குறிப்பாக திருநெல்வேலி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விழுப்புரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மதுரை, திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.