இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் இன்றுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் பத்து நாட்கள் ஊரடங்கு நீடித்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க காலை 6 மணி முதல் ஒரு மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. வெளியே சிக்கி தவிக்கும் நபர்கள் மதியம் 2 மணிக்குள் வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.