Categories
மாநில செய்திகள்

மேலும் 5 மாவட்டங்களுக்கு இன்று(செப் 8) உள்ளூர் விடுமுறை…. எந்தெந்த மாவட்டம் தெரியுமா….? வெளியான அறிவிப்பு….!!!!

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் செப்டம்பர் 8ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல புதுக்கோட்டை, அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று செப்டம்பர் 8ஆம் தேதி அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை, திருப்பூர், கோவை, கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களுக்கும் இன்று செப்டம்பர் 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓணத்தை முன்னிட்டு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ஈரோடு மாவட்டங்களுக்கு செப்டம்பர் 8 உள்ளூர் விடுமுறை கிடையாது என்றும் தற்போது அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |