தமிழக அரசு விவசாயிகளுக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகளும் பயன் அடைந்து வருகின்றனர். தமிழக விவசாயிகளுக்கு பயனுள்ள திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 50,000 விவசாயிகளுக்கு வழங்குவதற்கான முயற்சியில் இருப்பதாக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் சூரிய மின்சக்தி பூங்கா திருவாரூரில் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.