Categories
மாநில செய்திகள்

மேலும் 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாணவர்களுக்கு ஒரே ஹேப்பி தான் போங்க…!!!

தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் பத்தாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் உருவான காற்றழுத்த தாழ் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாகவும், இது வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை தமிழகம் புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக ஏற்கனவே 12 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக எட்டு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம், கரூர், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் நாளை கல்வி நிலையங்களுக்கு விடுமுறை. தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Categories

Tech |