நாடு முழுவதும் கடந்த ஆண்டு உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு பிறகு படிப்படியாக குறையத் தொடங்கியது. ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்நிலையில் ஆந்திரா ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் இருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு 3 பேருந்துகளில் வந்து சென்றவர்களில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து தொற்று உறுதியான அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.