Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மேளதாளங்கள் முழங்க….. மாலை அணிவித்து ராணுவ வீரருக்கு உற்சாக வரவேற்பு அளித்த ஊர் மக்கள்….!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே ஸ்ரீராம் நகரில் ராணுவ வீரரான சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 17 ஆண்டுகளாக சந்திரசேகர் இந்திய ராணுவத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பணி நிறைவு பெற்று சந்திரசேகர் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

அப்போது சிவகங்கை சீமை படை வீரர்கள் நற்பணி மன்றம் சார்பில் மேளதாளத்துடன் சந்திரசேகருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கிராம மக்கள் சந்திரசேகரை ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர்.

Categories

Tech |