தேனியில் காளியம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் பெண்கள் அனைவரும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
தேனி மாவட்டம் கம்பத்தில் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் தினமும் அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் கோவிலில் கடந்த 22ஆம் தேதி பங்குனி மாத திருவிழா தொடங்கியது. இத்திருவிழாவில் அம்மனுக்கு நறுமண பொருட்களால் அலங்காரங்களும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் இக்கோவிலில் பெண்கள் அனைவரும் அம்மனை தரிசனம் செய்துவிட்டு முளைப்பாரியை தூக்கிக்கொண்டு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்றனர். அவ்ஊர்வலம் பொதுமக்கள் அனைவரும் காணும்படி சில முக்கிய விதிகளுக்கு சென்றதையடுத்து, முளைப்பாரியை முல்லைப் பெரியாற்றில் கரைத்துள்ளார்கள். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.