கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நீலமங்கலம் புது காலனி பகுதியில் மேளக்காரரான புருஷோத்தமன்(22) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வர்யா(22) என்ற பெண்ணுடன் புருஷோத்தமனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மேளம் அடிக்க செல்லும் இடமெல்லாம் பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த புருஷோத்தமனை ஐஸ்வர்யா கண்டித்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனை அடுத்து உனது தாய் வீட்டிற்கு சென்று பணம் வாங்கி வா எனக்கூறி புருஷோத்தமன் தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த ஐஸ்வர்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி ஐஸ்வர்யாவின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக புருஷோத்தமன் மற்றும் அவரது தந்தை மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.