Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு… அன்புக்குரியவர்களை சந்திப்பீர்கள்… மற்றவர்களுக்கு உதவிகள் செய்வீர்கள்..!!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று அன்புக்குரியவர்களை நீங்கள் சந்திக்கக்கூடும். மற்றவர்களுக்கு  தேவையான உதவிகளை நீங்கள் செய்யக்கூடும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணி புரிவீர்கள். உற்பத்தி விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சுபச் செய்திகள் வந்து சேரும். கொஞ்சம் வியாபாரம் சுமாராக தான் நடக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவு அதிகரித்துக் கொண்டே போகும் பார்த்துக்கொள்ளுங்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகளை பற்றிய செய்திகள் வந்துசேரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை செய்திகள் வந்து சேரும், கவலை வேண்டாம். குடும்பத்தில் பிரச்சனை கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். உடல்சோர்வு அவ்வப்போது வந்து செல்லும் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது ரொம்ப நல்லது குடும்பத்தில் சின்ன சின்ன சண்டைகள் கொஞ்சம் ஏற்படலாம். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. பிள்ளைகளிடம் கொஞ்சம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை அதிர்ஷ்டத்தையும் உங்களுக்கு கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், காரியங்கள் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |