Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…உங்களிடம் உதவி பெற்றவர் நன்றி மறப்பார்.. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுங்கள்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று உங்களிடம் உதவி பெற்றவர் நன்றி மறந்து செயல்படக் கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் சுமாராகவே இருக்கும். அதிக நிபந்தனையுடன் கடன் பெற வேண்டாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பிள்ளைகளின் செயல்பாடு பெருமையை கொடுக்கும். இன்று குடும்பத்திலும் பொருளாதாரத்தினாலும் வீண் சஞ்சலங்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் குறையும்.  புத்திர வழியில் வீண் செலவுகளும், நிம்மதியற்ற நிலையும் கொஞ்சம் ஏற்படும். சிலருக்கு அசையா சொத்துக்களாலும் வண்டி வாகனங்களால் வீண் செலவுகள் கொஞ்சம் உண்டாகும். பார்த்துக்கொள்ளுங்கள்.

பொறுமையாகவும், நிதானமாகவும் இன்று நீங்கள் செயல்படுங்கள். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். சிறப்பாகவே இருக்கும். யாரிடமும் எப்பொழுதுமே எந்தவித வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று  தன விரைவில் ஓரளவு சிரமத்துடனே வந்து சேரும். நீங்கள் செலவை எப்பொழுதும் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். இன்று மாணவச் செல்வங்கள் கல்வியில் கடுமையாக உழைத்துதான் போராட போராடி ஜெயிக்க வேண்டியிருக்கும். கடுமையாக உழையுங்கள். உழைத்து பாடங்களைப் படியுங்கள் படித்த பாடத்தை தயவுசெய்து எழுதிப்பாருங்கள். கொஞ்சம் சிரமமான நாளாகத்தான் இன்றைய நாளில் உங்களுக்கு இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்களின் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |