மேஷம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய செயல்களில் அதிகமான நேர்த்தி நிறைந்திருக்கும். அரசு தொடர்பான காரியங்கள் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். உங்களுக்கு உதவிகளும் கூடிய சீக்கிரம் வந்து சேர்ந்துவிடும். அனைத்து விஷயங்களிலும் அனுகூலம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சிகள் நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் உங்களுக்கு சீராக இருக்கும்.
பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகள் மூலம் கொஞ்சம் கடுமையான கோபம் அடையக்கூடும். எதிர்பார்த்தபடி சக ஊழியர்களால் உதவிகள் கொஞ்சம் கிடைக்கும். இன்று ஓரளவு நிதி மேலாண்மையும் சிறப்பாகவே இருக்கும். மாணவ கண்மணிகளுக்கு தேர்வு நடந்து கொண்டிருப்பதால், கொஞ்சம் பாடங்களை கவனமாக படியுங்கள். படித்த பாடத்தை எப்பொழுதும் போலவே எழுதிப்பாருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்