மேஷம் ராசி அன்பர்களே…!
இன்று நல்ல வாக்குச் சாதுர்யமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட உங்களின் ராசிக்கு, எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து ஏற்றங்களை அடைவீர்கள்.
பணவரவுகள் தாராளமாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப் பலனை அடைய முடியும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.