மேஷம் ராசி அன்பர்களே.! இன்று உங்களுடைய உறவினர்களால் சிறு தொல்லையை சந்திக்கக்கூடும். பணம் பல வழிகளில் வந்து சேரும் கவலை வேண்டாம். அரசாங்கத்தில் உங்களுக்கு லாபம் கிடைக்கும். அந்தஸ்து உயரும். பேச்சால் காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். இன்று வீடு மனைகள் உங்களுக்கு சிறு செலவுகள் கொஞ்சம் இருக்கும். வரவு வந்தாலும் செலவுகள் கொஞ்சம் இருக்கும். சிலருக்கு நினைத்தவரையே கைபிடிக்கும் யோகமும், புத்திர வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். எதிர்பார்த்த நல்ல தகவல்கள் வந்துசேரும்.
டென்ஷன் குறையும். கோபம் கட்டுக்குள் இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். புதிய நட்புகள் மூலம் இன்று உதவிகளும் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். மனம் கொஞ்சம் அமைதியாகவே இன்று காணப்படும்.
அதிர்ஷ்ட திசை-: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீலம் நீல நிறம்