மேஷம் ராசி அன்பர்களே..! இன்று துன்பங்கள் தூளாகும் நாளாகவே இருக்கும். உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களை கண்டு கொள்வீர்கள். சிந்தனை வெற்றியை கொடுக்கும் அரசியல்வாதிகளால் அனுகூலம் ஏற்படும். இன்று எந்த ஒரு காரியத்தையும் தெளிவாக முடிவெடுக்க முடியாமல் குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும், சொன்ன சொல்லைக் காப்பாற்றி விடுவீர்கள்.
அதனால் மதிப்பு கூடும். எதிர்ப்புக்களையும் நீங்கள் சமாளித்து முன்னேறி செல்வீர்கள். எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். அதுமட்டுமில்லை தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றம் இருக்கும். படித்த பாடத்தை எழுதி பார்ப்பது கொஞ்சம் சிரமம் இல்லாமல் இருக்கும். அதுமட்டுமில்லாமல் நீங்கள் தேர்வுகள் முடியும்வரை காரமான உணவுகளை உண்ணாமல் இருப்பது ரொம்ப நல்லது.
பழ வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள், மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு நிமிடம் தியானம் இருப்பது படித்ததை மனதில் வைத்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்