மேஷம் ராசி அன்பர்களே..! இன்று பெற்றோர்களுடைய தேவைகளை அறிந்து உதவிகளைச் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் ஆதாயம் ஓரளவு சீராக இருக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேறும். பிள்ளைகளின் செயல்பாடு நிம்மதிக்கு வழிவகுக்கும், தேவையற்ற அலைச்சலை மட்டும் தயவு செய்து நீங்கள் தவிர்க்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படும். உடல் சோர்வு தூக்கமின்மை போன்றவற்றால் பாதிக்கப் பட நேரிடும் பார்த்துக்கொள்ளுங்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருங்கள்.
கொடுக்கல்-வாங்கலில் ஏதும் என்று வேண்டாம் புதிய முயற்சிகளையும் தள்ளிப்போடுவது ரொம்ப நல்லது கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும் காதலில் பயப்படக்கூடிய வாய்ப்புகளும் இன்று கிடைக்கும் இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை உங்களுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று இல்லத்தில் சிவபெருமான் வழிபாட்டையும் சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொள்வது ரொம்ப நல்லது. காரியங்கள் உங்களுக்கு சிறப்பாகவே நடைபெறும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் இளம் மஞ்சள் நிறம்