Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு… நட்பால் ஆதாயம் பெறுவீர்கள்…ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று எதிர்பாராத வகையில் செலவு இருக்கும். நண்பரின் ஆலோசனை உங்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். நட்பால் ஆதாயமும் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தாருடன் கோபமாக பேசுவதை மட்டும் தவிர்க்க வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லும், கவனம் இருக்கட்டும். அக்கம்பக்கத்தினருடன்  சில்லறை சண்டைகள் கொஞ்சம் ஏற்படக்கூடிய சூழல் இருக்கும், பார்த்துக்கொள்ளுங்கள். வெளியூர் பயணம் செல்வதாக இருந்தால் கொஞ்சம் கவனமாக செல்லுங்கள்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |