Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…புனித பயணம் மேற்கொள்வீர்கள்…புகழ் ஓங்கி நிற்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று புனித பயணங்கள் கோவில், குளம் என பக்தி மிக்க நாளாகவே இருக்கும். புதிய திருப்பங்கள் ஏற்பட்டு, விருப்பங்கள் நிறைவேறும். உங்கள் புகழ் ஓங்கி நிற்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். சக ஊழியர்களிடம் உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். கணவன்-மனைவிக்கு இடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மட்டும் கொஞ்சம் கவனமாகவே இருங்கள்.

பள்ளி செல்லும் மாணவர்கள் இன்று கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பார்கள். கல்வியில் வெற்றியும் பெறுவார்கள். தேர்வில் நல்ல மதிப்பெண் எடுப்பார்கள், தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் மனதை மட்டும் கொஞ்சம் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள், காரமான உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். தேர்வு முடியும் வரை பழங்கள் மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். இரவில் தூங்கச் செல்லும் பொழுது பால் அருந்திவிட்டு செல்லுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்களுடைய வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்க பெற்று சிறப்பான பலனை பெறலாம்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்:-3 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |