மேஷம் ராசி அன்பர்களே..! இன்று தொழிலில் இருந்து வந்த மந்தநிலை விலகி முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் இன்று நல்ல மதிப்பெண்களைப் பெற்று, பெற்றோர் ,ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு இன்று சிறப்பான நாளாக அமையும். தேர்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேர்வு முடியும் வரை உணவில் மட்டும் கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் இருங்கள், அது போதும். நல்ல மதிப்பெண்கள் எடுப்பதற்கு இது உதவும். நண்பர்களின் உதவியும் தக்க சமயத்தில் இன்று கிடைக்கும். அரசு வழியிலும் உதவிகள் கிடைக்கும்.
இன்று எதிலும் கவனமாக இருப்பது மட்டும் நல்லது ஏதேனும் மன கஷ்டம் கொஞ்சம் ஏற்படும். வீண் செலவும் கூட இருக்கும். உடலில் சோர்வு கொஞ்சம் ஏற்படலாம். ஆனால் மனம் எப்பொழுதும் போலவே தைரியமாகவே காணப்படும். உங்களுடைய தன்னம்பிக்கையும் இன்று அதிகரிக்கும். முயற்சிகளில் கூட சாதகமான பலனை இன்று கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாகவே இருக்கும். அது மட்டுமில்லை இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் வெள்ளை நிறம்