மேஷம் ராசி அன்பர்களே, இன்று தோல்வியே வெற்றிக்கு முதல் படி என தோல்வியை கண்டு தயவுசெய்து பயந்துவிடாதீர்கள். முன்னேற முயலுங்கள் வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். தாயின் ஆரோக்கியத்தில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை கவனமாக செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுபம், நிம்மதியும் இருக்கும்.
குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானமும் இன்று கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே சகஜ நிலை காணப்படும். குழந்தைகள் திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள். பிள்ளைகள் இன்று விளையாட்டுத் துறையில் ஆர்வமாக இருப்பார்கள். மாணவச் செல்வங்கள் விளையாட்டை ஓரங்கட்டிவிட்டு படிப்பில் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது. படித்ததை எழுதிப் பார்ப்பது ரொம்ப ரொம்ப நல்லது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்