Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு… முயற்சிகள் திருவினையாக்கும்.. வெற்றி உங்கள் பக்கம்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று தடைக்கற்களை படிக்கற்களாக மாறும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். முயற்சி திருவினையாக்கும் எனவே முன்னேற முயலுங்கள். வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். இன்று வீண் பகை கொஞ்சம் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக செயல்படுங்கள். இன்று விவசாயிகளுக்கு விளைச்சல் ஓரளவுதான் இருக்கும். கொஞ்சம் கடுமையாக உழைப்பு இருக்கும். புதிய பூமி மனை வாங்கும் விஷயங்களில் கவனம் இருக்கட்டும். இன்று பங்காளிகளை அனுசரித்து செல்வது ரொம்ப நல்லது.

புதிய வாய்ப்புகள் சற்று தாமதமாக கிடைத்தாலும் நல்ல வாய்ப்புகளாக  அமையும்.இன்று தன வரவில் ஓரளவு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். கூடுமானவரை வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபடாமல் இருந்தாலே போதுமானதாகவே இருக்கும். மாணவச் செல்வங்கள் கல்வியில் கடினப்பட்டு உழைத்து பாடங்களை படிக்க வேண்டும். கண்டிப்பாக எழுதிப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் நினைவில் வைத்துக் கொள்ள உதவும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிரவுன் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,  பிரவுன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன் மற்றும் நீல நிறம்

Categories

Tech |