மேஷம் ராசி அன்பர்களே..! இன்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த அனைத்து விஷயமுமே ரொம்ப சிறப்பாகவே நடக்கும். ஆனால் யோசித்து தான் சில காரியங்களில் நீங்கள் ஈடுபடவேண்டும். விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல்களில் கூடுதல் கவனம் இருக்கட்டும். தொழிலில் சில முக்கிய முடிவுகள் இன்று நீங்கள் எடுக்கக்கூடும். அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள் அது போதும். அனுகூலமான பலனை நீங்கள் பெறலாம். இன்று மேல்மட்டத்தில் இருப்பவர்கள் உங்களுடைய ஆலோசனையை கேட்க கூடும்.
சிலர் உங்களை அவமதிப்பது மனதிற்கு கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தும். இன்று சற்று கூடுதல் கவனமாக இருந்தால் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே செய்யலாம். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்க்க கூடிய உதவிகள், சில தடைகளுக்குப் பின் னரே கிடைக்கப்பெறுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். இருந்தாலும் பேசும்பொழுது அவர்களிடத்தில் நிதானத்தை மட்டும் கடைபிடியுங்கள். இன்று யாரிடமும் எப்பொழுதுமே வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப சிறப்பு. மஞ்சள் உங்களுக்கு இன்று அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். முடிந்தால் இல்லத்திலேயே சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள், மிகவும் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 1
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்