மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். சகோதர வழியில் ஆதாயம் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலன் கொடுக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் தொல்லை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவி செய்வார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாளாக இன்றைய நாள் இருக்கும். உங்களின் பொருட்களை மட்டும் இன்று நீங்கள் கவனமாக பாதுகாத்துக் கொள்வது ரொம்ப நல்லது.
வாகனத்தில் செல்லும் பொழுதும் ஆயுதம் நெருப்பு போன்றவற்றைக் கையாளும் பொழுதும் கவனமாக இருங்கள். தொழில் வியாபாரம் தொடர்பாக சின்னச்சின்ன அலைச்சல்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களுக்கு சரக்குகளை அனுப்பும் பொழுது கொஞ்சம் பாதுகாப்பாக அனுப்புவது நல்லது. இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கடினமாக உழைத்து பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். படித்த பாடத்தை எழுதிப்பாருங்கள், சந்தேகம் ஏதேனும் இருப்பின் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்: 4 மற்றும் 5
அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் பச்சை