மேஷம் ராசி அன்பர்கள்…!!! இன்று உங்களை அவமதித்து பேசியவர்கள் அன்பு பாராட்டக் கூடும் இருந்தாலும். இன்று ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையாக இருக்க வேண்டும். சில விஷயங்களை செய்யும் போது ரொம்ப கவனமாக செய்ய வேண்டும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். ஆனால் புதிய முயற்சிகள் மட்டும் வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வாக்குறுதிகளும் கொடுக்க வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது பொறுமையாகவே செல்லவேண்டும். யாரிடமும் கைமாற்றாக ஏதும் பணம் வாங்க வேண்டாம். இன்று நிதானம் என்பது கண்டிப்பாக தேவை. குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி நிலைக்கும்.
கணவன் மனைவி இடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்பட உறவினர்களுடன் பேசும்போது கவனமாக பேசுங்கள். சகோதர வழியில் நல்ல ஆதாயம் உண்டு . மற்றவரை தயவுசெய்து இன்று குறை கூறவேண்டாம். அதேபோன்று உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஓரளவுக்கு சிறப்புமிக்க நாளாகவே இருக்கும். , தீ ஆயுதங்களை பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்கவேண்டும்.. காதலர்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். அதைப் போன்று இன்று கண்டிப்பாக யாருக்கும் வாக்குறுதி தரவோ கடும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
இந்த முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுத்தாலும் அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்களின் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு
அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 1
அதிர்ஷ்ட நிறம் நீலம் மற்றும் வெள்ளை நிறம்