Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு …! துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள் …திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றியை கொடுக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே …! இன்று செல்வ நிலை சீராக இருக்கும்.  அரசால் ஆதாயங்கள் ஏற்படும்.  பாக்கிய விருத்தி ஏற்படும்.  சாதுரியமான பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள்.  பல வகைகளில் மனைவி உங்களுக்கு உதவிகளை செய்வார்கள்.  சொத்து விவகாரங்களில் காரியத்தடை தாமதம் வீண் அலைச்சல்கொஞ்சம் ஏற்படலாம்.  எதிலும் கூடுதல் கவனம் தேவை.  திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றியைக் கொடுக்கும்.

முக்கிய நபர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கப் பெறலாம்.  பணவரவு இருக்கும்.  வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.  நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் எதிலும் துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள்.  உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாகவே இருக்கும்.  இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.

வெளிர் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.  அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள்  கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள் அதனால் உங்களுடைய கரும தோஷங்கள் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை :  தெற்கு

அதிஷ்ட எண் :  3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் :  வெளிர் மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |