மேஷம் ராசி அன்பர்கள்…!! இன்று மதிநுட்பத்துடன் செயல்படுவீர்கள். முயற்சிகளுக்கான நல்ல பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் செழித்து வளர்ந்து சமூக அந்தஸ்தில் உயர்வு காண்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் அனைத்தும் சீராகும். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றப்பாதையில் செல்லும். நிதிஉதவி கிடைக்கும்.
வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பு கூடும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வும் கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதற்கு கூடுதல் நேரம் ஒதுக்குவது ரொம்ப நல்லது. புத்திக்கூர்மையுடன் செயல்படுவது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீலம் நிறம்