Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு … மன குழப்பம் நீங்கும் .. எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும்…!!

மேஷம் ராசி அன்பர்களே…!  இன்று எல்லாவிதத்திலும் உங்களுக்கு ஏற்றம் தரும் நாளாக இருக்கும்.  இனிமையான மாற்றங்கள் நிகழும்.  சாதுரியமான பேச்சாற்றலால் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.   குடும்ப  சுகத்தில் திருப்தி ஏற்படும்.  குடும்பத்தில் இருப்பவர்களால் சில வீண் பிரச்சனைகள் அவ்வப்போது வந்து செல்லும்.  கவலைப்படாதீர்கள் வீண் குழப்பமும் இருக்கும் பார்த்துகொள்ளுங்கள்.  எந்த ஒரு காரியத்தையும் திறன்படவே நீங்கள் செய்வீர்கள்.

கூடுமானவரை கொஞ்சம் காரியத்தை செய்யும் பொழுது ஆலோசனை செய்து காரியத்தில் ஈடுபடுவது ரொம்ப நல்லது.   கணவர் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம்.  பிள்ளைகளிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருங்கள்.  கூடுமானவரை பிள்ளைகளிடம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள்.  உறவினர்களிடம் எந்த உறுதியும் தயவு செய்து தராமல் இருப்பது நல்லது.  வாக்குறுதிகளை கொடுக்காமல் இருந்தாலே  போதுமானதாக இருக்கும்.

உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் சுமுகமாகவே இருக்குங்க.  இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.  வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தியே கொடுக்கும். அதுபோல் இன்று இல்லத்தில் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை:   கிழக்கு

அதிர்ஷ்ட எண்:   7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |