Categories
சினிமா தமிழ் சினிமா

“மேஸ்ட்ரோ எங்களது படம் பார்த்தது பெருமையான தருணம்”…. நடிகை சுகாசினி நெகிழ்ச்சி….!!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இசையமைப்பாளர் இளையராஜா பார்த்துள்ளார்.

மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இதுவரை தமிழ் சினிமா உலகில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களின் வரிசையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் நான்காவது இடத்தில் இருக்கின்றது. இன்னும் சில நாட்களில் விக்ரம் திரைப்படத்தின் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இசையமைப்பாளர் இளையராஜா பார்த்து இருக்கின்றார். இதனை நடிகை சுகாசினி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் மேஸ்ட்ரோ எங்களது படம் பார்த்தது பெருமையான தருணம் என குறிப்பிட்டு இருக்கின்றார்.

https://www.instagram.com/p/Cjcm6AIpUvF/?utm_source=ig_embed&ig_rid=ba187976-bf11-48ad-a99f-d32844273ddc

Categories

Tech |