Categories
உலக செய்திகள்

மே இறுதியில் அலற போகும் பாகிஸ்தான்…. ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள இம்ரான்கான்….!!!!

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் இம்ரான்கான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக எதிர்க்கட்சி தலைவரான ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் இம்ரான்கான், தான் பதவி இழந்ததற்கு அமெரிக்காவின் சதி தான் காரணம் என்று குற்றம் சாட்டினார். அதோடு மட்டுமில்லாமல் பாகிஸ்தானில் அமெரிக்காவால் இறக்குமதி செய்யப்பட்ட அரசு ஆட்சியில் அமர்ந்துள்ளதாகவும் விமர்சனம் செய்து வந்தார்.

இந்த நிலையில் இம்ரான்கான், தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பேரணியாக சென்று போராட்டம் நடத்த தனது பாகிஸ்தான் தெக்ரிக் – ஐ – இன்சஃப் கட்சி ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். எனவே ஆதரவாளர்கள் தங்கள் பேரணியை இந்த மாதம் (மே) இறுதி வாரத்தில் தொடங்க வேண்டும் என்றும் இம்ரான்கான் கூறியுள்ளார்.

Categories

Tech |