இந்தியாவில் கொரோனா தொற்று மே மாதம் உச்சத்தை அடையும் என ஐஐடி பேராசிரியர் நடத்திய கணிப்பில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 அலை தற்போது மிகவும் மோசமான நிலையை அடைந்து வருகிறது. இந்நிலையில் ஐஐடி கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் நிபுணர்கள் கணித முறைப்படி கொரோனா பரவல் குறித்த எண்ணிக்கை கணித்து வருகின்றனர். இந்த கணிப்பை கான்பூர் மற்றும் ஹைதராபாத் சேர்ந்த ஐஐடி குழுவினர் இணைந்து வெளியிட்டனர். அதன்படி மே மாதம் மத்தியில் கொரோனா தொற்றின் 2ஆம் அலை உச்சத்தை அடையும் என்றும், அதன் பின்பு படிப்படியாக குறையும் என்றும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மே 14-ஆம் தேதி முதல் 18 தேதி வரை கொரோனா பாதிப்பு மிகவும் உச்சத்தில் இருக்கும் என்றும், அப்போது சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 38 லட்சத்தில் இருந்து 48 லட்சமாக அதிகரிக்ககூடும் எனவும் கூறியுள்ளனர். மேலும் மே மாதம் 4 தேதி முதல் 8 தேதி வரை ஒரே நாளில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோரை தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இதற்கு முன் இந்த குழுவினர் வெளியிட்ட கணிப்பில் மே 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 33 லட்சத்தில் இருந்து 35 லட்சம் வரை இருக்கும் என கூறியுள்ளனர். ஆனால் தற்போதைய நிலை பெரிய மாற்றத்தை அளிப்பதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.