Categories
தேசிய செய்திகள்

மே மாதத்தில் மட்டும் 16 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு…. அதிர்ச்சி….!!!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பரவலுக்கு மத்தியில் கடந்த மே மாதத்தில் மட்டும் 16 முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.33, டீசல் விலை ரூ.4.15 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100.47 ரூபாய்க்கும் டீசல் லிட்டருக்கு ரூ.92.45- க்கும் விற்பனையாகி வருகிறது.

Categories

Tech |